2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

நாடு முழுவதிலும் கடும் மழை; கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில்

Super User   / 2010 மே 17 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் பெய்துவரும் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழையினால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கண்டி, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை  போன்ற பிரதேசங்களிலிருந்தே அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் நாட்டின் பல்வேரு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறைப் பிரதேசங்களில் மண்சரிவு
ஏற்படக்கூடிய அபாயமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இலங்கையைச் சுற்றி காற்றமுக்கநிலை ஏற்பட்டுள்ளதாலேயே கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் இன்று காலை முதல் கடும் காற்று,இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது என்று அந்த நிலையம் கூறியது. 

இந்த மழை காரணமாக கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொழும்பு கோட்டை, ஒல்கொட் மாவத்தை, புறக்கோட்டை, ஆட்டுப்பட்டித்தெரு, மருதானை ஹொர்ட்டன் வீதி, ராஜகிரிய, இப்பன்கல சந்தி, பேர்னி ரேமண்ட் வீதி, தேசிய நூல் நிலைய சுற்றுவட்டம் உள்ளைட்ட பல பகுதிகளே இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, மின்னல் தாக்கம் தொடர்பில் மிகவும் அவதானமாகவும் இருக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  Comments - 0

  • Dr. Roshan Monday, 17 May 2010 11:09 PM

    இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சோதனை. ஏன் தண்டனையாகவும் இருக்கலாம். பொறுமையுடன் இருந்து, பாவமன்னிப்பும் தேடிக்கொள்ளுங்கள். உலக அழிவு நெருங்கிவிட்டது என்பதையும் நினைவுபடுத்துகிறது. எல்லாம் வல்ல அல்லா எம் அனைவரையும் பொருத்தருள்வனாக.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .