2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜரான முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர், நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

............................................................

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் சற்று முன்னர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில்,  பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு முன்னர்,  நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்,  இன்று (13) காலை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே இவர்கள் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

இதற்கமைய,  முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்பச்சுவர்ஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ், அதன் உரிமையாளர் ஜெப்ரி அலோசியஸ், சித்த ரஞ்ஜன் உலுகல்ல ஆகிய நால்வரே நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

.................................

கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களை, இன்று (13) மாலை 4 மணிக்கு முன்னர், கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்று முன்னர் உத்தரவிட்டது.

இவ்வாறு மன்றில் முன்னிலையாகும் சந்தேகநபர்களுக்கு எதிராக, எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாமென்றும், கோட்டை நீதவானுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு இன்று மாலை 4 மணிக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகாத சந்தேகநபர்களை, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்த​ரவைச் செயற்படுத்த, சட்ட மா அதிபருக்கு சந்தர்ப்பமளிக்கப்படுவதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

தம்மைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவைச் செயலிழக்கச் செய்யுமாறு கோரி, ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேன்முறையீட்டு நீதியரசர்களான நவாஸ், ஷிரான் குணரத்ன, சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழுவால், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, மேற்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்த மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழு, இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை, இம்மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடிகள் தொடர்பான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களுக்கு எதிராக, நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பெர்பெஷுவல் ட்ரெஷரீஸ் லிமிடட், சந்திரே​ஷ் ரவீந்திர கருணாநாயக்க, லக்ஷ்மன் அர்ஜுன மஹேந்திரன், அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், பளிசேன அப்புஹாமிலாகே தொன் கசுன் ஓஸதி, ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், ஷித்த ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் கார்தியே புஞ்சிஹேவா, துய்ய ஹென்னதிகே புத்திக சரத்சந்திர, சங்கரபிள்ளை பத்மநாபன், பதுகொட ஹேவா இந்திக்க சமன் குமார ஆகியோருக்கு எதிராகவே, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .