2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

நெதர்லாந்தில் புலி சந்தேக நபர்கள் கைது

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக அந்த நாடு 4 தமிழர்களை கைது செய்துள்ளது.

நெதர்லாந்தின் பிரெடா, ரொட்டர்டாம், ஹீம்ஸ்கிர்க் மற்றும் ஹீர்லீன் ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள  நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக நெதர்லாந்து நாட்டு வழக்குத் தொடர்பான பேச்சாளர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு  நிதி சேகரிப்பதற்கான நடடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  இவர்களது விசாரணை திசைதிருப்பப்பட்டிருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நெதர்லாந்தில் விடுதலைப் புலி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் அந்த நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுதந்திரமான தமிழ் நாடொன்றை அமைக்க முயலும் மேற்படி அமைப்பு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் கடந்த 2006ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--