2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக பொலிஸார் விசாரணை

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகத் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

"எலிசபெத்" என்ற பெயரில் கல்வி நிறுவனமொன்றை நடத்தி வந்துள்ள இந்த சந்தேக நபர்கள் சுமார் 20 பேரிடமிருந்து இரண்டு மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிளிருந்து தெரியவந்துல்ளது.

வெள்ளவத்தை மற்றும் குருநாகல் பிரதேசங்களில் இந்த "எலிசபெத்" கல்வி நிறுவனத்தின் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பணிப்பாளர்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர்.

ஆரம்ப காலத்தில், தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களை இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்திருந்தபோதிலும், பின்னர் தமது வாடிக்கையாளர்களை ஏமாற்ரி பண  மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக ஊடகங்கள் வாயிலாகவும் தமது கல்வி நிறுவனம் தொடர்பான விளம்பரப்படுத்தல்களை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அசம்பவத்துடன் தொடர்புடையதான குடும்பத்தின் மருமகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய சந்தேகநபர்களையும் தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ள ஊழல் மோசடி விசாரணைப் பிரிவு சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
                      பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர்கள்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--