2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

‘நிபந்தனைகள் அடிப்படையிலேயே அனுமதி’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், உரிய நிபந்தனைகள் அடிப்படையிலேயே, சுருக்குவலைக்கான அனுமதி வழங்கப்பட்டிப்பதாக, கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கலிஸ்ரன் தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்துக்கு முன்னால் இன்று (17) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட மக​ஜரைப் பெற்றுக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், 25 பேருக்கே தற்காலிகமாக சுருக்குவலை அனுமதிகள் வழங்கப்பட்ருப்பதாகவும் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 வரையான காலப்பகுதியில் மாத்திரமே, இந்த சுருக்குவலை தொழிலில் ஈடுபடமுடியுமெனவும் தெரிவித்தார்.

இருந்தபோதும், தமக்கு இதில் திருப்தி இல்லையெனத் தெரிவித்த மீனவர்கள், இதனை முற்றாகத் தடைச் செய்யுமாறும் வலியுறுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .