2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

‘நியமனங்களைத் தடுத்த அரசியல்வாதிகளை பகிரங்கப்படுத்துக’

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வா.கிருஸ்ணா)

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கிய நியமனங்களை தடுத்த அரசியல்வாதிகள் தொடர்பானத் தகவல்களை பகிரங்கமாக தேர்தல்கள் ஆணையாளர் வெளிப்படுத்த வேண்டுமென வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(07) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அச்சங்கத்தின் தலைவர் கே.அனிதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வேலையற்றப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X