2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 16 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின்  சடலமொன்று இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதை கண்ட பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அட்டன்,  டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--