2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 12 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதனை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பல வருடங்களாக பதில் பீடாதிபதிகளே பீடாதிபதிகளாக செயற்பட்டதாக அமைச்சின் செயலாளர் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதனால், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தகுதிவாய்ந்தோருக்கு நாளைய தினம் (13) நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வில் சித்தியடைபவர்கள், பீடாதிபதிபதி, உப பீடாதிபதி மற்றும் ஏனைய பிரதான பதவிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .