Editorial / 2017 ஜூன் 10 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டன்-பொகவந்தலாவை பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அவ்விருவரும், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஹட்டன் பகுதியிலிருந்து நோர்வூட் நோக்கிச்சென்ற கெப்ரக வாகனமே, இன்று மாலை 3:30 மணியளவில் சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது
விபத்தில் அந்த வாகனத்தின் சாரதியும், அதில் பயணித்தவருமே, காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், குடியிருப்பொன்றும் சேதமடைந்துள்ளது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே, அந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்த நோர்வூட் பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
46 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago