2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

’நீர் காகம்’ கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தினால் 10ஆவது  தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டடுள்ள முப்படையினர் பங்குப்பற்றும் “நீர் காகம்’ அப்பியாச பயிற்சிகள் இன்று (03) ஆரம்பமாகியுள்ளன.

வெளிநாட்டு  படையினர் 100 பேரும், இலங்கை இராணுவத்தினர் 2400 பேரும்,  கடற்படையினர் 400 பேரும், விமானப் படையினர் 200 பேரும் இந்த பயிற்சிகளில் பங்கேற்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நிறைவடைய இருக்கும் இந்த அப்பியாச  பயிற்சிகள், அவசர காலகட்டத்தில் படையினர் கூட்டாக இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள கூடிய  நோக்கத்தில் கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டு இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த அப்பியாச பயிற்சிகள் மின்னேரியவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை தலைமையகத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளன.

விஷேட நடவடிக்கை இராணுவ தந்திர உபாயம் மேற்கொள்ளும் இந்த அப்பியாச பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையணி, விஷேட படையணி, எயார்  மொபைல் படையணி,  பொறிமுறை காலாட் படையணி, கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மலேசியா, மாலைதீவு, நேபாளம், ரஷியா, அமெரிக்கா, பங்களாதேஷ், சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஜக்கிய இராச்சியம் மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளை சேர்ந்த இராணுவத்தினர் இந்த அப்பியாச பயிற்சியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .