2025 ஜூலை 09, புதன்கிழமை

'நல்லாட்சியும் த.தே.கூ.வும் வேறல்ல’

Editorial   / 2017 மே 31 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசையும் பிரித்து பார்ப்பது தவறு. அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே, கூட்டமைப்பு இருக்கின்றது. அரசாங்கத்திலிருந்து கூட்டமைப்பைப் பிரித்துப் பார்ப்பதனால் தான், மக்களுக்கு அவர்கள் மீதான கோபங்களும் வெறுப்புக்களும் அதிகரிக்கின்றன” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 100ஆவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டபின், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எட்டு வருடங்களாக இந்தப் பிரச்சினையை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியோடு தான், ஐக்கிய நாடுகள் சபை, கடந்த மார்ச் மாதம், இலங்கைக்கு மேலும் இரண்டுவருட கால அவகாசத்தை வழங்கியது. கூட்டமைப்பு அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தால், இந்த அவகாசம் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது.

கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டாலும், அவர்களது தலைமை, தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு துணை போய்க்கொண்டேதான் இருக்கும். அந்தத் தலைமை செய்யும் பச்சைத் துரோகத்தை மறைப்பதற்காகவே தான், இங்கு சிலர் வந்து ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

ஆகவே, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது இருப்பதற்கான பொறுப்பை, அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, அதற்கு சமமாக கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .