2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நல்லூர் சம்பவம்; உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டுக்குப் பதவி உயர்வு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் பிரேமச்சந்திர, அவரது மரணத்துக்குப் பின்னர் உதவி இன்ஸ்பெக்டர் தரத்துக்குப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.  

நல்லூரில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற சம்பவத்தின்போது, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு உடன் பாதுகாப்பு வழங்கிச் சென்ற மேற்படி பொலிஸ் சார்ஜன்ட், நீதிபதியைக்; காப்பாற்றுவதற்கு முற்பட்ட வேளையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி; உயிரிழந்தார்.  

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .