2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

நாளை யசூஷி அகாஷி-தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நாளை நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பின்போது வன்னி மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் கலந்துரையாடவுள்ளன.

இச்சந்திப்பு நாளை இரவு கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவராலயத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாடு சென்றுள்ளதால் அவர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளமாட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--