2021 ஜனவரி 20, புதன்கிழமை

பிக்குனிகள் வாக்களிக்கும் உரிமையை இழந்தார்களா?

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிக்குனிகள் தங்களது வாக்குகளை பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவால் தேர்தல்கள் ஆணையாளருக்கு இது தொடர்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 8,000க்கும் அதிக பிக்குனிகள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் பிக்குனிகள் என்று குறிப்பிடப்பட்டு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படாமை மற்றும் புத்த சாசன அமைச்சின் ஊடாக பிக்குனிகளாக அவர்கள் பதிவுசெய்யப்படாமை ஆகியவற்றின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பயன்படுத்தகூடிய வகையில், பிக்குனிகளை அடையாளப்படுத்தும் அடடையை  பயன்படுத்தி, வாக்களிக்ககூடியவாறான விசேட அடையாள அட்டையை தேர்தல்கள் ஆணைக்குழுவால் தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .