2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பாகிஸ்தானில் நாளை சார்க் உள்துறை அமைச்சர்களின் கூட்டம்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சார்க் உள்துறை அமைச்சர்களின் கூட்டம் பாகிஸ்தானில் நாளை நடைபெறவுள்ளது.

மேற்படி சார்க் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள்,  இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமான இடங்களான சுற்றுலா நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிற்கு  பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--