2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, இப்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘தம்மா’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’ என்ற இந்திப் படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார்.

அவர் விமான நிலையம் வந்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து நேற்று முன்தினம் வந்த அவர், போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.

மாஸ்க்கையும் நீக்க மறுத்த அவர், முகத்தில் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து அவருக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அவர் அழகுக்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X