2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பங்களாதேஷுக்கு, இன்று (13) விஜயம்செய்யவுள்ளார்.  

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அம்மையாரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  

இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திரத் தொடர்புகள்,
1972ஆம் ஆண்டில் ஆரம்பமாகின. 

இலங்கையில், பங்களாதேஷின் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பிலும், கடல்சார், கல்வி, சுற்றுலா, மீன்பிடி, சுகாதாரம் போன்ற துறைகளிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. 

அத்துடன், இரு நாடுகளுக்குமிடையில் விவசாய, கல்வி, வெளிவிவகாரப் பயிற்சி, குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற விடயங்களிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன. 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 142 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுகிறது. அந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .