2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பூஜித்த, ஹேமசிறியின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரினதும் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே, இன்று உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை தடுப்பதற்காக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமையின் ஊடாக, குற்றவியலுக்கு வழிசமைக்கும் வகையில், கடமைகளிலிருந்து தவறியமை, மனித படுகொலைகளுக்கு வழிசமைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே அவ்விருவருக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .