2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

’பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் அவதானம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்போது, பெண்கள், குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுவது அவசியம் என்று, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாடு, இன்று (31) கொழும்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாகவும் போக்குவரத்துகளிலும் பெண்களுக்கு சுதந்திரமாகச் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்நிலைமை மாற்றப்படல் வேண்டும் என்றும் பெண்களுக்கு கௌரவத்தையும் பாதுகாப்பையும் தரும் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பல வருடங்களாகக் காணப்படும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .