2025 ஜூலை 05, சனிக்கிழமை

பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகள் செல்ல ஹெலிகொப்டர் சேவை

Super User   / 2010 மே 19 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகள்  புறப்பட்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதியினை விமானப்படையினர் ஒழுங்கு செய்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு பொதுமக்கள் செல்வதற்காக குறைந்தளவு கட்டணத்தில் ஹெலிகொப்டர் வசதி ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

பயணிகள் 011-144944 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள  முடியுமெனவும் அவர் கூறினார்.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் கடந்த 17ஆம் திகதி முதல் அடை மழை பெய்ததினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், வீதிகளில் வெள்ளநீர் காணப்படுவதால், கொழும்பிற்கும் கட்டுநாயக்காவிற்கும் இடையிலான சில பகுதிகளிலுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .