Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Nirshan Ramanujam / 2017 ஜூலை 21 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் என்றழைக்கப்படும், மகாலிங்கம் சசிகுமார் என்பவரை, யாழ்ப்பாணத்திலிருந்து தப்பிச்செல்வதற்கு உதவினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான லலித் ஜயசிங்ஹ, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்று (20) மாலை இடம்பெற்ற, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் விசேட கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே, தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, எழுத்து மூலமாக ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்ததாகவும் இதனை கருத்திற்கொண்டு லலித் ஜயசிங்கவை பதவியிலிருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பான விசாரணை யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ட்ரயல் அட் பார் முறையில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே, வடமாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும், மத்திய மற்றும் ஊவா மாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான லலித் ஜயசிங்ஹ, கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
ஊர்காவற்றுறை பதில் நீதவான் ஆர்.ஈ.சபேஷனின் உத்தரவின் பிரகாரம்,இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
06 Jul 2025