2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பெண் விரிவுரையாளரை காணவில்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண்  விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ளாரென,  நிலாவெளி மற்றும் துறைமுக பொலிஸ் நிலையங்களில் இன்று (21)  முறைப்பாடு செய்யப்பட்டு ள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

29 வயதுடைய நடராசா போதநாயகி என்பவரே காணாமல் போயுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (20), விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் காவலாளிகளும், இவர்  முச்சக்கர வண்டியில் சென்றதை அவதானித்ததாக  குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் விரிவுரையாளரின் பை மற்றும் காலணி போன்ற பொருட்கள் இன்று காலை (21),  திருகோணமலை சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக,  திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்,  திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--