2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

புத்தளம் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் - மாகாண அமைச்சர் நிஷாந்த

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி மின்சாரம் வீடமைப்பு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

வடமேல் மாகாண அமைச்சராகப் பதவியேற்ற பின்பு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தேவையான போக்குவரத்து அனுமதிச்சீட்டு, வீடமைப்பு வசதிகள், மின்சார வசதிகள் உட்பட அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுத் தருவதாக வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிட்டார்.

இதேவேளை, மின்சாரத்தை கட்டுப்பாட்டுடன் பாவிப்பது தொடர்பான விளக்கங்களை பாடசாலை மட்டத்தில் வழங்கப் போவதாகவும்  அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .