2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பரவியுள்ள கொரொனா தொற்று காரணமாக பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றையும் இன்று (16) வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிக்கை விடுக்கப்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பில், எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை,"நாட்டிலே தற்போது நிலவுகின்ற கொவிட்-19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும். 

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகோரிக்கை விடுக்கின்றது. இவ்விடயத்தில் முற்றுமுழுதாக எமது பங்களிப்பினை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

மக்களுடைய பாதுகாப்புக்கு அதியுச்ச கரிசனை வழங்கப்பட வேண்டும் என்பதாலும் இவ் அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாத காரணத்தாலும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை பிற்போடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .