2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இந்த மாத இறுதியில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்காக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

தற்போதுவரை, 70 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அரசியல் கட்சிகள் சில, இதுவரை தமது கணக்கு அறிக்கைகளை ஒப்படைக்கவில்லை என, தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக, அந்தக் கட்சிகளை இரத்துச்செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--