2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பேராதனை பல்கலை மாணவி துவாரகாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

Super User   / 2010 ஜூன் 01 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2009 நவம்பர் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவி இராசையா துவாரகாவை விடுதலை செய்யுமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் அகதி முகாம்களுக்குள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களை சுகந்திரமாக நடமாட அனுமதிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டியுள்ளது.

இது சம்பந்தமாக மேலும் கருத்துத் தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உபுல் பிரேமரத்ன, இராசையா துவாரகா கைது செய்யப்பட்டமைக்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார் என்ற காரணத்தினாலேயே ஆகும். எப்படி துவாரகாவால் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைக்காமல் இருந்திருக்க முடியும்? அவள் வாழ்ந்த கிளிநொச்சி பகுதி கடந்த 30 வருடங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--