2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பேராயரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கோட்டா வாக்குறுதி

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:47 - 1     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க மதகுருமார்கள் விடுத்துள்ள வேண்டுகோளை தமது அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்ததும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் அற்ற நாட்டுக்குள் மக்கள் சுந்திரமாக வாழும் நிலைறை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆயர்களின் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (25) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, கோட்டாபய ராஜபக்ஷ, பயங்கரவாத தாக்குதலால் கத்தோலிக்க மதகுருமார்களின் வேதனையை தன்னால் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 1

  • S.P.Jesuthasan Sunday, 25 August 2019 03:18 PM

    கட்டடக்கலை முன்னேற்றங்களுடன்,சிங்கப்பூரின் சமத்துவம், சகவாழ்வு போன்ற பண்புகளும் இலங்கைக்குள் கொண்டவரப்பட் டால் , உள் நாட்டுள் பெரும்பான்மை, சிறு பான்மையோர் மத்தியில் எவ்வித பிரசனைகளும் இருக்க போவதில்லை என்பதை மேதகு அதி மேற்றாணியார் மல்கம் ரஞ்சித் புரிந்து கொள்வாராக.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .