2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பார்வதி அம்மாள் சென்னையில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதி நிராகரிப்பு

Super User   / 2010 மே 15 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை இந்திய உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

86 வயதான பார்வதி அம்மாள் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது யாழ்.வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மலேசியாவில் தங்கியிருந்த பார்வதி அம்மாள் தனது சிகிச்சைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சென்றிருந்தபோது விமான நிலையத்தில் வைத்து இந்திய அதிகரிகளினால் திருப்பியனுப்பப்பட்டிருந்தார். 

இந்நிலையில், தமிழகத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக மலேசியாவிலிருந்து திருச்சி வருவதற்கு, இந்தியத் தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி அம்மாள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருந்தது.

இதனை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிய கருணாநிதி, பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தரலாம் என்று பரி்ந்துரைத்திருந்தார்.

தமிழக அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசாங்கம், பார்வதி அம்மாள் மீதான தடையை நீக்கி, அவர் இந்தியா வந்து சிகிச்சை பெறுவதற்கான அனுமதியளித்திருந்தது.

இதற்காக அவருக்கு 6 மாத கால விசாவினையும் வழங்கியது என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். பார்வதி அம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக நிபந்தனைகளுடன் கூடிய 6 மாதகால விசாவை இந்தியா வழங்கியிருந்தது.

இந்நிலையில் பார்வதி அம்மாள் நிபந்தனைகளை தளர்த்தி  இந்தியாவில் சிகிக்சை அள்ளிக்கக் கோரி உச்சநீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டது. பார்வதி அம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை இந்திய உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்தே பார்வதி அம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

  Comments - 0

 • nuah Saturday, 15 May 2010 09:46 PM

  பந்து போல் எறியப்படும் பிரச்சினையாக்கிய அரசியல்வாதிகள் முகத்தில் வீசப்படும் பிரச்சினை என்று உச்ச நீதிமன்றம் கூறுகின்றது என்றே நான் நினைக்கின்றேன். கருணாநிதி பந்தை எறிந்தார் சிதம்பரத்துக்கு. அவர் அதை பாதுகாப்பு செயலருக்கு கொடுத்தார் கடைசியில் மீண்டும் கருணாநிதிக்கே அனுப்புமாறு உச்சநீதிமன்று உத்தரவு இட்டிருக்கிறது, மத்திய மாநில உறவில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை, சுகாதாரமும் கல்வியும் மாநிலத்துக்கு உரிய அதிகாரம். ஆலோசனை வழங்கலாமே ஒழிய அதில் மத்திய அரசு கடினமாக இருக்க இயலாது . பாதுகாப்பு போல அல்ல!

  Reply : 0       0

  Lankan Sunday, 16 May 2010 04:07 AM

  இது மனிதாபிமானமற்ற செயல். இது ஒருவரின் உயிர் சம்பந்தமான பிரச்சினை. அத்துடன் மகனின் பிரச்சினைக்கு தாய் என்ன செய்ய முடியும்? பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் இந்தியா ஏன் இவருக்கு மறுக்கிறது? நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். இலங்கை அரசு இவருக்கு சிகிச்சை அளித்து முன்மாதிரியாக நடக்க வேண்டும்.

  Reply : 0       0

  xlntgson Sunday, 16 May 2010 08:19 PM

  உச்ச நீதி மன்றம் இதை விசாரித்தகவே தெரியவில்லை. மாநில மத்திய அதிகாரங்களை பற்றிய தீர்ப்பாகவே தெரிகிறது. அதாவது கல்வி சுகாதாரம் ஆகிய விடயங்களில் மாநிலங்களுக்கே அதிகாரம் மைய அரசு பணமும் கொடுத்து உபதேசம் வேண்டுமானால் செய்யலாம். பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது என்று கூற இயலாது நிபந்தனைகளை தளர்த்த நீதி மன்றுக்கு அதிகாரமில்லை என்பதே உண்மையாகும். தலைப்பு செய்திகள் திசைதிருப்புகிற மாதிரி இருக்கக்கூடாது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--