2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கு பிணை

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகிடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (14) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த மாணவர்கள் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கையில் இனிமேல் ஈடுபடகூடாது என்று எச்சரித்த நீதவான், விசாரணை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என, மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் கடந்த​ 9ஆம் திகதி மாலை பகிடிவதையை அடிப்படையாகக் கொண்டு மோதல் இடம்பெற்றிருந்தது.

கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடந்த 10ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X