2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

புலிகளுக்கு ஆதரவு; ராமசாமி மீதான நடவடிக்கைக்கு இந்தியா கோரிக்கை

Super User   / 2010 மே 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப்பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.

அண்மையில் மதுரையில் நடைபெற்ற சீமானின் "நாம் தமிழர் அரசியல் மாநாட்டில்" கலந்து கொண்ட அவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளதுடன் "மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் அந்த இயக்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவோம்" என்றும் அறிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சுக்கும் அறிக்கையொன்றை கையளித்ததை அடுத்து அந்த அறிக்கை மலேசிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோரிக்கை கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.

குறித்த கோரிக்கைக் கடிதத்திலேயே பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.


  Comments - 0

  • xlntgson Friday, 28 May 2010 09:25 PM

    அவரால் ஒருபோதும் மலேசியாவில் நேரடியாக ஆட்சிக்கு வரமுடியாது, மலேசியாவில் பூமிபுத்ராசட்டம் இருக்கின்றது. இலங்கையில் அவ்வாறான சட்டம் வேண்டும் என்று கேட்கும் பௌத்ததுறவிகள் இருக்கின்றனர். 2ஆம் தர பிரஜை என்பது சட்ட அங்கீகாரம் பெரும்! அரசோடு இணைந்து இலங்கையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தொண்டமான் போன்றோரை கலந்துகொண்டு இராமசாமி போன்றோர் இம்மாதிரியான அறிக்கைகளை விடவேண்டும். இலங்கையில் இந்திய வம்சாவளியினர் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர் சிங்களவருடன் சமமான வாக்குரிமையை பெற்றிருக்கின்றனர் என்பது இராமசாமி அறிவரோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--