2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர் விமல்

Super User   / 2010 ஜூலை 07 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு ஐ.நா. பிரதிநிதியொருவரால் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ஸ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

லஞ்சம் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும் அமைச்சர் விமல் கூறினார்.

எனினும் இது குறித்து டெய்லிமிரர் இணையத்தளம் பொலிஸாரிடம் தொடர்புகொண்டபோது அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இருக்குமானால் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் புகாரிடலாம் எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பான தனது ஆலோசனைக் குழு நியமனத்தை மீளாய்வு செய்யத்தவறினால் தேசிய சுதந்திர முன்னணி நாடடெங்கிலும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தும் எனவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • agoyajimmy Wednesday, 07 July 2010 08:31 PM

    வம்சைய பேசாம லஞ்ச ஒழிப்பு பிரிவுல சேர்த்துடுங்க. முசமில அவரோட அசிஸ்டன்ட் ஆக வச்சுடுங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--