2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

’பொலிஸார் தவறான பாதையில் பயணிக்கின்றனர்’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் சரியான பாதையில் சென்றாலும், பொலிஸார் மற்றும் விசாரணைகள் தவறான பாதையில் பயணிப்பது கவலைக்குரிய விடயம் என, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைதளத்தில் நேற்று (04) இட்டுள்ள பதிவில் இதனைக் கூறியுள்ளார்.

பொதுமக்களின் நிதியை மோசடி செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பலர், சாட்சிகளுடன் உள்ள நிலையில் அவர்கள் பின்னால்  பொலிஸாரும், சட்டமா அதிபர் திணைக்களமும் செல்லவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு தான் இணக்கம் இல்லையென்றும் அவர் தமது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--