2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் மீது தாக்குதல்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள நபரொருவரை, கைது செய்வதற்காக சென்றிருந்த இரண்டு பொலிஸாரை தாக்கிய சம்பவமொன்று, சிறிபுர-ரத்மல்கண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதிக்கு நேற்று (10), பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபரை கைது செய்ய சென்றிருந்த, அரலகன்வில பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரையே, சந்தேகநபர் இவ்வாறு தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த,  விக்கிரமநாயக்க, ராஜபக்ஷ என்ற இருவரும்  சிகிச்சைக்காக தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, அரலகன்வில பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--