2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பல மில்லியன் ரூபாய் நிதி மோசடி; சந்தேகநபர் கம்பளையில் கைது

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத நிதி நிறுவனத்தின் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கம்பளைப் பிரதேசத்திலிருந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் 39 கிளைகளை நிறுவி அதன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

இந்நிலையில்,  கண்டி மற்றும் நுரெலியாவிலுள்ள உயர் நீதிமன்றங்களினால் விடுக்கப்பட்ட பிடியாணை உத்தரவின் பேரிலேயே  குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இன்று  இவர் பொலிஸாரால் கம்பளை நீதிவான் உபாலி குணவர்த்தன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--