2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பஸ்ஸுக்குள் சடலம்

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா - உடுகம்பொல – கெஹெல்பத்தார பகுதியில், இன்று (15) சிறிய ரக பஸ் ஒன்றில் இருந்து, கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சாரதியின் இருக்கைக்கு அருகில் இருந்து குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 58 வயது நிரம்பியவரென தெரியவந்துள்ளது.

அத்துடன், சடலமாக மீட்கப்பட்டவர், பஸ் உரிமையாளரின் மனைவி என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--