2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்திய மீனவர்கள் தயார்

George   / 2016 ஜூலை 10 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத் தீர்வு ஒன்று முன்வைக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் ஆலோசிக்க தாம் தயாராக உள்ளதாக தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.எமிரேட் தெரிவித்துள்ளார்.

மீனவர்களது பிரச்சினை, வாழ்வாதாரம் குறித்து இரண்டு நாட்டு அரசாங்கங்களும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, மீனவர்கள் பிரச்சினை குறித்து விரைவில் யுத்தமின்றிய தீர்வு எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை(07) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .