Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 15 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரு பெயர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலைக் காரணமாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபருக்கு பதிலாக, முறைப்பாடு செய்த நபரொருவரை பொலிஸார், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
ராமதாஸ் லோகதாஸ் என்பவரை பதுளை பதில் நீதவான் ரமேஷ் குமார முன்னிலையில் பொலிஸார் கடந்த 8 ஆம் திகதியன்று ஆஜர்படுத்தியுள்ளனர்.
வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்நபர், வழக்கு தவணைகள் பலவற்றுக்கு சமூகமளிக்காததால் அவருக்கு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு அமைவாக, இவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் இவருக்கு பிணை வழங்க வேண்டமெனவும் நீதவானிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
இதன்போது குறுக்கிட்ட சட்டத்தரணி நெழும் கமகே, இங்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ள நபர் வேறு ஒரு வழக்கின் முறைப்பாட்டாளர் எனவும் இவர் மீது பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, இந்தவழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரது பெயரும் மேற்படி நபரின் பெயரும் ஒரே பெயர் என்பதால் பொலிஸார் குழப்பமடைந்துள்ளனர் எனவும் எடுத்துரைத்தார்.
இந்நபரை கைதுசெய்ததற்கான காரணத்தை கூறுமாறு பொலிஸாரை நீதவான் கோரினார். இதற்கு பதிலளித்த பொலிஸார் மேற்படி நபரினதும் வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரினதும் பெயர்கள் ஒரேமாதிரி இருந்ததினால் ஏற்பட்ட குழப்பமே இதற்கு காரணமென நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டின் பேரில் நீதவான் முன், முன்னிலைப்படுத்தப்பட்ட ராமதாஸ் லோகதாஸ் என்பவரை விடுவித்ததுடன் பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்ட பொலிஸாரையும் நீதவான் எச்சரித்தார்.
17 minute ago
19 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
54 minute ago
1 hours ago