Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மேனகா மூக்காண்டி
'ஒன்றிணைந்த எதிரணியினரால் நடத்தப்பட்ட பாதயாத்திரையால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படவில்லை. நுளம்பு குத்துவதால், யானைக்கு ஒருபோதும் வலிக்கப்போவதில்லை. அவர்களின் நாடகம், இப்போது நாடு முழுவதிலும் அம்பலமாகிவிட்டது' என்று, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறினார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரிடம், 'மேற்படி பாதயாத்திரையால், தங்களது கட்சிக்கு ஏதேனும் அழுத்தம் நேர்ந்ததா?' என்று, ஊடகவியலாளர்; ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'தங்களுடைய பாதயாத்திரைக்கு, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி வருவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் பறையடித்து வந்தனர். ஆனால், அவர்களின் கூட்டம், கெம்பல் மைதானத்தை நிரப்பக்கூட போதாமல் போனதால், லிப்டன் சுற்றுவட்டத்தைச் சுற்றிவந்த நாடகத்தை, நாடே கண்டுகளித்தது' என்றார்.
7 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Nov 2025