2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

கிரிக்கெட் விவகாரம்: ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம்

Editorial   / 2026 பெப்ரவரி 28 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கிரிக்கெட் பற்றி முன்னர் கூறிய கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஷம்மி என்பவர் யார்? கிரிக்கெட் என்ன அவருடைய அம்மா, அப்பாவின் பரம்பரைச் சொத்தா? அவரைப் போகச் சொல்லுங்கள், அவரோடு ஜெயந்தவையும் போகச் சொல்லுங்கள். ஷம்மிக்கு (அரசாங்கத்தின் கீழ்) இயங்க முடியாவிட்டால், 'ஷம்மி கிரிக்கெட்' என்று தனியாக ஆரம்பித்து விளையாடச் சொல்லுங்கள். கிரிக்கெட் சபையை (Cricket Board) சீர்திருத்தாமல் நான் ஓயமாட்டேன். இதில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்தும் நடக்கின்றன (ஊழலைச் சுட்டிக்காட்டி). இது ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகம். இரண்டு மூன்று பேரின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாடும் கிரிக்கெட் இது. மிக விரைவில் பழைய உன்னதமான கிரிக்கெட் யுகத்தை மீண்டும் கொண்டு வருவோம். "ஜனாதிபதி அனுர அவர்களே... நீங்கள் இப்போது ஜனாதிபதியாகி விட்டீர்கள். பதவிக்கு வந்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. கொடுத்த வாக்குறுதிகள் வெறும் பேச்சோடு நின்றுவிடக் கூடாது. உங்களுக்கு ஒருவேளை மறந்திருக்கலாம் என்பதால் இதை நினைவுபடுத்துகிறோம் (நன்றி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .