2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முதலமர்வன்று சமர்ப்பிக்கப்படும்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு, எதிர்வரும் 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய தினத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என நாடாளுமன்றச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு, ஜனாதிபதியினால் சபை அமர்வு உத்தியோகபூர்வமான முறையில் ஆரம்பித்து வைக்கப்படும். அதற்கு முன்னராக சபாநாயகர் தெரிவு இடம்பெறும் எனவும் தம்மிக்க தசநாயக்க கூறினார்.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் 8ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் கரும பீடமொன்று இயங்கி வருகின்ற போதிலும், இதுவரையில் 70 எம்.பி.க்கள் மாத்திரமே அதன் சேவையைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .