2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொன்சேகாவுக்கு எதிராக மனுத் தாக்கல்

George   / 2016 மார்ச் 12 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத சரத் பொன்சேகாவுக்கு அக்கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வழங்கியமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் தென் மகாணசபை உறுப்பினர் மேஜர் அஜீத் பிரசன்ன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க திஸாநாயக்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .