A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சேவைபுரிந்த சமன் ஏக்கநாயக்க, இலங்கையின் பொதுநிர்வாக சேவையிலுள்ள அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியாவார்.
சமன் ஏக்கநாயக்க- பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி என்பதோடு தன்னுடைய பொதுநிர்வாக முதுமணி பட்டப்படிப்பினை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திலும் நிறைவு செய்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கைக்கான பிரதான தலைமை அலுவலராகவும் பணியாற்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago