Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Thipaan / 2016 மார்ச் 22 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், துப்பாக்கி மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர், ஆயுதங்களைக் களைவதற்கு அஞ்சியமையால், ஒவ்வொரு செயற்பாடும் தோல்வியடைந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள்; மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயற்பட்ட தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எழுதியுள்ளார்.
அவர் மரணிப்பதற்கு முன்னர் எழுதிய இரண்டு புத்தகங்களிலேயே மேற்கண்டவாறு எழுதியுள்ளார்.
ஒரு கூர்வாளின் நிழலில், போர்க்காலம் ஆகிய இரண்டு புத்தகங்களையே அவர், எழுதியுள்ளார்.அவ்விரு புத்தகங்களின் வெளியீட்டு விழா, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்றது.
அவர், தன்னுடைய ஒரு கூர்வாளின் நிழலில், எனும் புத்தகத்தில், பிரபாகரன் தன்னுடைய பாதுகாப்பு தொடர்பில் எச்சந்தர்ப்பத்திலும் சந்தேகத்துடனேயே இருந்தார். சமாதான ஒப்பந்தத்தின் பெறுபேறாக நிராயுதமாகிவிடுவோம் என்றும் அது பாதுகாப்பற்றது என்றும் பிரபாகரன் கவனஞ்செலுத்தியிருந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல, இறுதி யுத்தத்தில் தோல்வியடைவதற்கான பிரதான காரணங்கள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
30 வருடங்கள் தொடர்ச்சியாக யுத்தம் செய்தமையால் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள், கடும் மனவழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தின் புலனாய்வாளர்கள், புலிகள் அமைப்பின் உள்துறைக்குள் நுழைந்தமை, நான்காவது ஈழப்போரின் கட்டளையிடும் தளபதிகள் 45 மற்றும் 50 வயதுகளை உடையவர்கள், அவர்களால் 1 கிலோமீற்றர் தூரம் கூட ஓடிச்செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர் என்பன, மிக முக்கியமான காரணங்களாக அமைந்திருந்தன என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (நன்றி: லங்காதீப)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago