2021 மே 06, வியாழக்கிழமை

பொலிஸ் பதிவேடு

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.விபத்தில் ஒருவர் பலி

மின்னேரியா, மருதன்கடவலை திரிகோணமடுவ வீதி, ஜயமாவத்த சந்தியில், புதன்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினருக்குச் சொந்தமான ட்ரக் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ட்ரக்கின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2.மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது
 

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்ட கிம்புலாக பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் 200 மதுபான போத்தல்களை வைத்திருந்த நபரை, புதன்கிழமை (07) இரவு 11.20க்கு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தும்பலதெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

3. ஓடும் ரயிலிலிருந்து பாய்ந்து இளைஞன் தற்கொலை

பொல்ஹாவல பகுதியில், ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் பயணித்த இளைஞன், புதன்கிழமை (07) பிற்பகல் 3.45 மணியளவில், ரயிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை, கன்சலாகமுவையை வசிப்பிடமாக கொண்ட 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

4.இந்தியப்பிரஜைகள் இருவர் கைது

சுற்றுலாவிசாவில் இலங்கைக்கு வந்து, சட்டவிரோதமான முறையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு இந்தியப்பிரஜைகளை, வாகரை பொலிஸார் புதன்கிழமை (07) இரவு 7.45 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 மற்றும் 40 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

5.ஹெரோய்னுடன் ஒருவர் கைது

மின்னேரியாவில், 2கிராம் 120 மில்லிகிராம் நிறையுடைய ஹெரேய்னை வைத்திருந்த நபரை, பொலன்னறுவை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், புதன்கிழமை (7) பிற்பகல் 1.45 மணியளவில் கைது செய்துள்ளனர்.

6.தொல்பொருள் தோண்டிய மூவர் கைது

அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அலிகம்பே கல்கரவத்த பகுதியில், தொல்பொருள் இருப்பதாக கூறப்படும் இடத்தை தோண்டிய மூன்று பேரை, புதன்கிழமை (07) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் தோண்டுவதற்காக பயன்படுத்திய பெக்கோ மற்றும் பாரிய இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

7. கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் பலி

அக்குரஸ்ஸ, பிட்டபெத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீகந்த பகுதியில், கட்டுத்துவக்கு வெடித்து புதன்கிழமை (07) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் அக்குரஸ்ஸ போபத்தகொட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .