2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மகாஓயாவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு

Menaka Mookandi   / 2010 ஜூலை 07 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


மகாஓயா, தங்கொட்டுவை பகுதியில் நீண்ட நாட்களாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் இரண்டை சுற்றிவளைத்த பொலிஸார், இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய சுற்றிவலைக்கப்பட்ட இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்களிலிருந்து, 70 பீப்பாய்கள், 4,150 லீற்றர் சோடா, 1,034 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு), 500 கிலோகிராம் சீனி போன்றனவும் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், கைதான சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .