2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

‘மக்களை வெளியேற்றுவதற்கு கட்டாயச் சட்டம் வேண்டும்’

George   / 2017 ஜூன் 01 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“ஏனைய நாடுகளில் உள்ளதைப்போன்று அபாய வலயத்தில் உள்ள மக்களை வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றும் சட்டம் இலங்கைக்குத் தேவை, அதனைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். 

“மண்சரிவு அபாய வலயத்தில் உள்ள மக்கள் கடும் மழை பெய்யும் போது, அது தொடர்பில் அவதானமின்றி வீட்டுக்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். இதனால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

மண்சரிவு அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் நாட்டில் காணப்படும் சட்டவிரோத கட்டங்கள், அனுமதியற்ற கட்டங்கள் என்பவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, நாட்டின் தற்போதைய அனர்த்த நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, அவர் இதனைக் கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “மண்சரிவு மற்றும் அனர்த்தங்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்துவதில்லை. மண்சரிவு அனர்த்தம் ஏற்படக்கூடிய மலைப்பகுதிகளில் மக்கள் வீடுகளை அமைத்து வருகின்றனர். 

“தற்போது பதுளை, பண்டாரவளை பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அபாய வலயங்களில் உள்ள மக்களுக்கு வேறு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்ம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான இடங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .