2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

'மக்களிடம் அறவிட்ட அதிக வரியை திருப்பிக்கொடுங்கள்'

George   / 2016 ஜூலை 12 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 2ஆம் திகதி முதல் இன்று வரை நாட்டிலுள்ள சகல மக்களிடம் அறவிடப்பட்ட அதிக வரிக்கு என்ன நடந்தது என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

அதிக வரி தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் அழைத்து வந்திருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இவ்வாறு வரியை அதிகரித்தமையால் மக்களின் பணத்தை அரசாங்கம் பிற்பொக்கட் அடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் செலுத்திய அதிக வரியை மீண்டும் மக்களுக்கு அரசாங்கம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் ஜீ.எல்.பீரிஸ், மேலும் கூறினார்.

இதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .