2021 மே 08, சனிக்கிழமை

'மக்களின் விருப்பத்தையே அரசியலமைப்பு பிரதிபலிக்கும்'

George   / 2016 ஜூலை 28 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'அரசியலமைப்பில் திருத்தங்களை, எதேச்சதிகாரமாக அரசாங்கம் உருவாக்குவதாக சிலர் பிரசாரம் செய்து வருவது முற்றிலும் பொய்யானது. மக்களின் விருப்பங்களைக் கேட்டு, அதனடிப்படையிலேயே அது உருவாக்கப்படும். அது, நாடாளுமன்ற உறுப்பினர்களினாலேயே நிறைவேற்றப்படும்' என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர ராஜித சேனாரத்ன மற்றும் ஊடகத்துறைப் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு போலவே  இந்த அரசியலமைப்பும், நாடாளுமன்ற உறுப்பினர் சகலரின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில் அரசாங்கத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவுமில்லை. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

எந்தவொரு அரசியலமைப்பும் நாடாளுமன்றத்திலேயே இறுதியாக நிறைவேற்றப்படும் இலங்கையின் சுதந்திரத்துக்கும் முன்னும் பின்னும் அரசியல் யாப்புகள் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் பெரும்பான்மை விருப்பத்தின் அடிப்படையில் இது நிறைவேற்றப்படும். முழுக்க முழுக்க மக்களின் கருத்துகளை உள்வாங்கியே அரசியலமைப்பு உருவாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X