2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் 25 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 மே 28 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தற்போது வீசி வரும் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக 25 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன  என கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ருக்ஷான் குரூஸ், இன்று தெரிவித்தார்.

கடற்றொழிலில் ஈடுபடும் 14,000  மீனவக் குடும்பங்களும் வாவி மீன்பிடியில் ஈடுபடும் 11,000  மீனவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

கடும் காற்றும் மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக இம்மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பூநொச்சிமுனை, ஏத்துக்கால, புன்னைக்குடா, நாவலடி, வாகரை உட்பட பல கரையோரப் பிரதேசங்களில் கடும் காற்று வீசி வருகின்றது எனவும் அவர் கூறினார்.

கடல் கொந்தளிப்புக் காணப்படும் நிலையிலும் கடும் காற்று வீசி வரும் நிலையிலும் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு மீனவர்களைச் செல்ல வேண்டாம் என்று  கடற்றொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .