2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குருக்கல்மடம் வாவி பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்பு

Super User   / 2010 ஜூலை 01 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, குருக்கல்மடம் வாவி பிரதேசத்தில் பொலிஸாரின் உதவியுடன் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின்போது,  சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் மற்றும் தோணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.டி.ஜோர்ஜ் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடுவதால், மட்டக்களப்பு வாவியிலுள்ள 128 வகையான மீனினங்களில் 29 வகையான மீனினங்கள் முற்றாக அழிவடைந்திருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X